செப்.21 ல் 'நபிகள் நேசிப்பு தினம்’ அனுசரிக்கிறது பாகிஸ்தான் || Pak to observe September 21 as Love the Prophet Day
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
  • நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்
  • வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
செப்.21-ல் 'நபிகள் நேசிப்பு தினம்’ அனுசரிக்கிறது பாகிஸ்தான்
செப்.21-ல் 'நபிகள் நேசிப்பு தினம்’ அனுசரிக்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்,செப்.19-
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தில் முகமது நபியை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, வரும் செப்டம்பர் 21-ம் தேதியை நபிகள் நேசிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
 
மேலும், அந்நாளை தேசிய விடுமுறையாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு எதிராக மக்கள் அமைதியாகப் போராடவேண்டும் எனவும் இக்கூட்டம் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அஷ்ரப், ‘முஸ்லிம் மக்களின் மன அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், முஸ்லிம் மதத்தின் புனிதத்துவத்தை அவமதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தை பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்க்கிறது என்பதை நான் உலகிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு எதிராக மக்கள் அமைதியாகப் போராடவேண்டும். அதேநேரம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். நமது சொந்த உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது’ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தலைமை நீதிபதி வீட்டின் முன்பு முற்றுகை: கைதான 3 வக்கீல்களுக்கு ஜாமீன்-ஐகோர்ட்டு உத்தரவு

தலைமை நீதிபதி வீட்டின் முன்பு முற்றுகையிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ....»

amarprakash160-600.gif