சென்னையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் சீராக்கப்படும்: புதிய கமிஷனர் ஜார்ஜ் பேட்டி || chennai new police commissioner George Interview
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
சென்னையில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் சீராக்கப்படும்: புதிய கமிஷனர் ஜார்ஜ் பேட்டி
சென்னையில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் சீராக்கப்படும்:
 புதிய கமிஷனர் ஜார்ஜ் பேட்டி
சென்னை, செப். 19-

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதி நேற்று மாலை இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜார்ஜ், புதிய மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் உள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் பொறுப்பு ஏற்றார். திரிபாதி அவரை வரவேற்று அழைத்து சென்று கமிஷனர் இருக்கையில் அமர வைத்தார்.

முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். சென்னை மாநகர 98-வது போலீஸ் கமிஷனராக பதவி ஏற்ற ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை போலீஸ் கமிஷனர் பதவி என்பது மிகவும் சவாலான பதவியாகும். அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் இந்த பணியை சிறப்பாக செய்வேன். இந்த பணியில் என்னை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையை பொறுத்தவரை பல பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்துவேன். இதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. 

இரண்டாவதாக சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது சென்னை மாநகர சாலைகளில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளது. அவை இனி தீர்க்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் குறைகள் பற்றி போலீசாருடன் நேரடியாக எந்தவித தயக்கமுமின்றி நம்பிக்கையுடன் புகார் அளிக்கலாம். அவர்களது குறைகள், நல்ல முறையில் கனிவுடன் தீர்க்கப்படும். மேலும் சென்னையில் குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

இவ்வாறு  கமிஷனர் ஜார்ஜ் கூறினார்.

கடந்த 1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்த இவர் கமுதியில் ஏ.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பிறகு சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஆனார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வடக்கு மண்டல ஐ.ஜி. ஆகவும் பணி புரிந்துள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்களாக விஜயகுமார், முத்துகருப்பன் ஆகியோர் பணியாற்றிய போது மத்திய சென்னை இணை கமிஷனராக ஜார்ஜ் பணியாற்றினார். இன்று அவர் கமிஷனராக பதவி ஏற்க வந்தபோது அவரை சென்னை மாநகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா (பொறுப்பு), குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங், இணைக் கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சேசஷாயி, செந்தாமரைக்கண்ணன், சத்திய மூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

மதகுரு தனது மனைவியுடன் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிராக ஜாமினில் வரமுடியாத வாரண்ட் ....»