இந்தியா ஆப்கானிஸ்தான் நாளை மோதல்: மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா அயர்லாந்து || t20 cricket india afghanistan tomorrow fight
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
இந்தியா- ஆப்கானிஸ்தான் நாளை மோதல்: மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து
இந்தியா- ஆப்கானிஸ்தான் நாளை மோதல்: மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து
கொழும்பு, செப். 18-
 
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. 2-வது நாளான நாளை (புதன்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 2007-ம் ஆண்டு சாம்பியனான இந்தியா- ஆப்கானிஸ்தான் (ஏ பிரிவு) மோதுகின்றன.
 
இந்திய அணி 2010-ம் ஆண்டு உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டில் வென்று இருந்தது. இதனால் பலவீனமான ஆப்கானிஸ்தானை இந்தியா எளிதில் தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எளிதில் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 185 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது ஏமாற்றமே.
 
பந்துவீச்சு, பீல்டிங்கில் மிகுந்த முன்னேற்றம் தேவை. ஷேவாக், விராட் கோலி, ரோகித் சர்மா, கேப்டன் டோனி மற்றும் இர்பான் பதான், பாலாஜி, அஸ்வின் ஆகியோர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இதேபோல அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற்றால்தான் அடுத்து வரும் ஆட்டங்களில் மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.
 
அதற்கு ஏற்றவகையில் இந்திய வீரர்கள் தாங்கள் முத்திரையை பதிக்க வேண்டும். இந்திய அணி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது. முன்னதாக அதே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
 
50 ஓவர் உலக கோப்பையை 4 முறை வென்ற ஆஸ்திரேலியா 20 ஓவர் உலக கோப்பையை இதுவரை வென்றது இல்லை. தற்போது முதல்முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. சமீபகாலங்களில் 20 ஓவர் போட்டியில் மோசமாக ஆடியதால் ஆஸ்திரேலியா தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளது. அயர்லாந்து 10-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் அயர்லாந்து சவாலாக விளங்கும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரே நாளில் 16 தங்கம்

கவுகாத்தி, பிப். 8–12–வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி கவுகாத்தி, ஹில்லாங்கில் நடைபெற்று வருகிறது.முதல் நாள் ஆட்டத்தில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif