மின் தடையால் அவதி: மின்சார பொறியாளர் அலுவலகத்துக்கு பூட்டு பொதுமக்கள் போராட்டம் || current cut Electrical engineer office lock Public protest
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
மின் தடையால் அவதி: மின்சார பொறியாளர் அலுவலகத்துக்கு பூட்டு- பொதுமக்கள் போராட்டம்
மின் தடையால் அவதி:
 மின்சார பொறியாளர் அலுவலகத்துக்கு பூட்டு-
பொதுமக்கள் போராட்டம்
பெரியபாளையம், செப் 15-

வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தில் கடந்த 11-ந் தேதி முதல் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே மின் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த  நிலையில் கிராம மக்கள் மின் தடை குறித்து புகார் தெரிவிக்க வெள்ளியூரில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.

ஆனால் 10 மணி ஆகியும் அதிகாரிகள் வராமல் அலுவலகம் திறந்து கிடந்ததை கண்ட  பொது மக்கள் அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருநின்றவூர் உதவி கோட்டப்பொறியாளர் முனு சாமியிடம் உடனடியாக பாண்டேஸ்வரத்தில் இருந்து மாற்று ஏற்பாடு செய்து மின்சாரத்தை வழங்க பொது மக்கள் வலியுறுத்தினர். அதுபோல செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வரும் கோட்ட பொறியாளர் செல்வராஜிடம் கோரிக்கை வைய்யுங்கள் என்று கூறினார்.

அதிகாரி செல்வராஜ் வரும்வரையில் எங்களுடன் இருங்கள் என்று கூறி அவரை சிறை பிடித்தனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் உஷாமுருகன், துணை தலைவர் ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் விரைந்து வந்து பொது மக்களிடம் சமரசபேச்சு வார்த்தை நடத்தி இரவுக்குள் மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி அவரை மீட்டுச்சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif