சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம் || Government to allow foreign investment in retail trader condemned peramaippu
Logo
சென்னை 03-08-2015 (திங்கட்கிழமை)
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்
சென்னை, செப். 15-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்து உள்ள மத்திய அரசின் முடிவு அனைத்து வியாபாரிகளுக்கும் பெருத்தபாதிப்பை ஏற்படுத்தும். இதை வியாபாரிகள் அனைவரும் எதிர்த்த போதும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு வணிகர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடிக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

கொடுங்கையூரில் கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய ஊர்க்காவல்படை வீரர்

ராயபுரம், ஆக.3–கொடுங்கையூர், சுப்பண்ணன் தெருவை சேர்ந்தவர் அஷரப். இவர் அதே பகுதியில் நடந்த அம்மன் கோவில் ....»

MM-TRC-B.gif