சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி || Fighter Sindhu bows out of China Masters
Logo
சென்னை 30-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • படகுப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வர்ஷா-ஐஸ்வர்யா வெண்கலம் வென்றனர்
  • ஆசிய விளையாட்டு: இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
  • ஆசிய விளையாட்டு: இந்திய கபடி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி
சாங்சோவ்(சீனா),செப்.15-
 
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் தொடர்ந்து அபாரமாக ஆடி வந்த இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
 
காலிறுதியில் அவர், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை லீ சுவேருயி என்பவரை வீழ்த்தினார். நட்சத்திர வீராங்கனை சாய்னா இல்லாத நிலையில், இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய சிந்து அரையிறுதியிலும் வெற்றி பெறுவார் என ஆவலுடன் காத்திருந்தனர்.
 
ஆனால் சிந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை யான்ஜியாவோவிடம் போராடித் தோல்வியடைந்தார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் முதல் செட்டை 10-21 என இழந்த சிந்து, 2ம் செட்டை (21-14) போராடி கைப்பற்றினார்.
 
இதனால் 3-வது செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சீன வீராங்கனை அந்த செட்டை (21-19) வசமாக்கியதால், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

கிரிக்கெட் சூதாட்டம்: வங்காளதேச வீரர் அஸ்ரபுலுக்கு 5 ஆண்டாக தடை குறைப்பு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு வங்காளதேச பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ....»

160x600.gif
160x600.gif