மத்திய அரசுக்கு மாயாவதியின் ஆதரவு தொடருமா? அக்டோபர் மாதம் முடிவு செய்கிறார் || Will decide on continuing support to UPA in Oct BSP
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
மத்திய அரசுக்கு மாயாவதியின் ஆதரவு தொடருமா? - அக்டோபர் மாதம் முடிவு செய்கிறார்
மத்திய அரசுக்கு மாயாவதியின் ஆதரவு தொடருமா? - அக்டோபர் மாதம் முடிவு செய்கிறார்
லக்னோ, செப். 15-
 
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என பிரச்சினைக்குரிய பல்வேறு அதிரடி முடிவுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மீது கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
 
இந்நிலையில் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வது பற்றி இப்போதே சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
 
இதுபற்றி அக்கட்சியின் தலைவர் மாயாவதி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய அரசு கடந்த இரண்டு மூன்று நாட்களில் பல்வேறு மக்கள் விரோத முடிவுகளை எடுத்திருக்கிறது. டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு கட்டுப்பாடுகள் விவசாயிகளையும், ஏழை மற்றும் நடுத்தர மக்களையும் கடுமையாக பாதிக்கும்.
 
டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து, அடித்தட்டு மக்கள் சமுதாயத்தில் வாழ்வது கடினமாகிவிடும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
 
இந்நிலையில் அக்டோபர் 9-ம்தேதி லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமின் 6-ம் ஆண்டு நினைவு நாள் பேரணி நடைபெறுகிறது. அதே நாளில் அல்லது மறுநாள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை தொடர்வதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif