விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசி விற்பனை: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர் || society shop salem rice low price minister start
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசி விற்பனை: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் அரிசி விற்பனை: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
சென்னை, செப். 15-
 
பருவமழை குறைவாக பெய்ததால் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்து கூட்டுறவு கடைகளில் குறைந்த விலைக்கு அரிசி வழங்க முதல்-அமைசச்ர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
 
இதற்காக விலை கட்டுப்பாடு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார்.   இதையடுத்து இன்று முதல் கூட்டுறவு சிறப்பங்காடிகளில் குறைந்த விலை அரிசி விற்பனை தொடங்கியது. திருவல்லிக்கேணி கூட்டுறவு அங்காடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே,ராஜு, காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குறைந்த விலை அரிசி விற்பனையை தொடங்கி வைத்தார்.
 
டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சி மக்கள் அங்காடி ஆகியவற்றின் மூலம் 12 இடங்களில் உள்ள சில்லரை விற்பனை அங்காடிகளிலும், 19 சூப்பர் மார்க்கெட்டுகளிலும் குறைந்த விலை அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பொன்னி அரிசியை போன்று தரமான அரிசி கிலோ ரூ.25-க்கும், சன்னரக அரிசி கிலோ ரூ.21-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்க நாளான இன்று குறைந்த விலை அரிசி வாங்க கூட்டுறவு கடைகளில் பெண்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் குறைந்த விலை அரிசியை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
 
பெண்கள் கூறும்போது கடைகளில் ரூ.36 முதல் ரூ.40 வரை விற்கப்படும் அரிசி கூட்டுறவு கடைகளில் ரூ.25-க்கும் ரூ.31-க்கும் கிடைக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர். தொடக்க விழா நிகழ்ச்சியில் உணவுத் துறை செயலாளர் எம்.பி. நிர்மலா, உணவு வழங்கல் ஆணையாளர் பஷீர்அகமது, அதிகாரிகள் ராஜேஷ் லக்கானி, சந்திரசேகரன், மனோகரன், சக்தி சரவணன், ரவிச்சந்திரன், வில்வசேகரன், சாமுண்டீஸ்வரி, சேகர் கலந்து கொண்டனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ரூ.50 லட்சம் மோசடி: ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு, ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். ....»