அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: தோற்கடிக்க தீவிர முயற்சி || srilanka war punishment enquiry in usa parliament
Logo
சென்னை 25-07-2014 (வெள்ளிக்கிழமை)
அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: தோற்கடிக்க தீவிர முயற்சி
அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: தோற்கடிக்க தீவிர முயற்சி
வாஷிங்டன், செப்.15-
 
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் நடந்தன. எனவே, ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவில் இலங்கை மீது அமெரிக்கா போர்க்குற்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
 
இந்த நிலையில், போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி இலங்கையின் மீது சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை 7 எம்.பி.க்கள் இணைந்து கடந்த 7-ந்தேதி தாக்கல் செய்தனர்.
 
அதில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போதும், அதன் பிறகும் இரு தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிம மீறல்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, இதுகுறித்து சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா. உருவாக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இலங்கையில், ஊடக சுதந்திரம், மற்றும் மனிதா பிமான அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது, விடுதலைப்புலிகளின் மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச தலையீடு வேண்டும். அர்த்த முள்ள அதிகார பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதை அமெரிக்க பாராளுமன்றத்தில் தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தில் இலங்கை ஆதரவு எம்.பி.களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் வாஷிங்டனில் உள்ள இலங்கை தாதர் ஜாலியா விக்கிரம சூரியா ஈடுபட்டுள்ளார். எம்.பி.க்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை வெளியுறவு செயலாளர் கருணாரட்ண அமுனுகம தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

குர்திஷ் அரசியல்வாதியான பெளட் மஸ்சூம் ஈராக் அதிபராகத் தேர்வு

குர்திஷ் அரசியல்வாதியான பௌட் மஸ்சூம்(77) பாராளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஈராக்கின் புதிய அதிபராக இன்று தேர்வு ....»