சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல் || chennai tanker truck collided on a rail kottiya 5 thousand liters of diesel on the road
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
ராயபுரம், செப். 15-

தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. கிடங்கில் இருந்து இன்று காலை 9 மணியளவில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கே.கே.நகர் நோக்கி சென்றது. கொருக்குப்பேட்டை எழில்நகர் அருகில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை லாரியின் டிரைவர் குமார் கடக்க முயன்றார். அப்போது திருவொற்றியூர் சரக்கு முனையத்தில் இருந்து வியாசர்பாடி சரக்கு தளத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த ரெயில், டேங்கர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.

இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.

டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.

 ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.

இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு கடும் கட்டுப்பாடு

சென்னை மாநகரில் 2 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தில், முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் ....»

VanniarMatrimony_300x100px_2.gif