தைவான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்தார் தமிழக வாலிபர் || Tamil guy get married with Taiwan girl
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
தைவான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்தார் தமிழக வாலிபர்
தைவான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்தார் தமிழக வாலிபர்
ஆலந்தூர்,செப்.13-
 
சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-முத்தரசி. இந்த தம்பதியினரின் மகன் மனோஜ் சங்கர். இவர், லண்டனில் வேலை பார்த்து வருகிறார். இவர், இணைய தளத்தில் தகவல் பரிமாற்றம் செய்தபோது, தைவான் நாட்டை சேர்ந்த பீலிங் யு (ஜலின்) என்பவரை காதலித்தார். இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய இரு வீட்டு பெற்றோரும் மனோஜ் சங்கருக்கும், ஜலினுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
 
இதையடுத்து இவர்களின் திருமணம் பரங்கிமலையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணப்பெண் ஜலின், தமிழ் கலாச்சாரப்படி அலங்கரிக்கப்பட்டு, பட்டு புடவை அணிந்து இருந்தார். பின்னர் காலை 11 மணிக்கு மணமகள் ஜலின் கழுத்தில் மணமகன் மனோஜ் சங்கர் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த உறவினர்கள் மணமக்கள் மீது அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர்.
 
இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண் ஐலினின் தந்தை ஜின்காய்வு, அண்ணன் யு இசன் கியூன், சகோதரி யு பீயி ஆகியோர் வந்திருந்தனர். இந்த திருமணத்தில் மனோஜ் சங்கரின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் லண்டனில் உள்ள மனோஜ் சங்கரின் உறவினர்கள், தைவான் நாட்டில் உள்ள ஐலின் உறவினர்கள் இந்த திருமணத்தை பார்க்க இணையதளத்தின் மூலம் நேரிடையாக காட்டப்பட்டது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா 36 முறை தாக்குதல்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் புகார்

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு ....»