செப்.19 ல் அன்னா குழு கூட்டம்: கிரண் பெடி || Anna Hazares group meeting on September 19 says Kiran Bedi
Logo
சென்னை 30-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
செப்.19-ல் அன்னா குழு கூட்டம்: கிரண் பெடி
செப்.19-ல் அன்னா குழு கூட்டம்: கிரண் பெடி
சிங்கப்பூர்,செப்.13-
 
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வதற்காக அன்னா ஹசாரே குழுவின் கூட்டம் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளதாக அன்னா குழு உறுப்பினர்களில் ஒருவரான கிரண் பெடி கூறியுள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தனது குழுவில் உள்ள உயர்மட்ட தலைவர்களுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அழைப்பு விடுத்திருப்பதாகவும் கிரண் பெடி தெரிவித்துள்ளார்.
 
சிங்கப்பூரில் நடைபெற்ற வங்கி ஆண்டுவிழா நிகழ்ச்சி ஒன்றின்போது இதுபற்றி பேசிய கிரண் பெடி, அன்னாவோ, தானோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது அடுத்தகட்ட யுத்தி பற்றி 19-ம் தேதி நடக்கும் கூட்டத்தில்தான் தெரியவரும் எனவும் கூறினார்.
 
மேலும், ‘தற்கால அரசியல் அமைப்பிலிருந்து ஊழலை அழிப்பதற்கான யுத்தி பற்றி முடிவை எடுப்பதுதான் எங்களது நோக்கம். அரசியல் கட்சிகளுக்கெதிரான போராட்டம் சவாலானது. 2014-க்குப் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நிபந்தனை அடிப்படையிலேயே அளிக்கப்பட வேண்டும்’ எனவும் கிரண் பெடி பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மேட்டூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும்: வைகோ கோரிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-          காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் ....»

amarprash.gif