கொல்கத்தா: மம்தா பானர்ஜியுடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு || Akhilesh Yadav meets Mamata
Logo
சென்னை 04-06-2015 (வியாழக்கிழமை)
கொல்கத்தா: மம்தா பானர்ஜியுடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு
கொல்கத்தா: மம்தா பானர்ஜியுடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு
கொல்கத்தா,செப்.12-
 
‘கொல்கத்தா வந்த பின்னரும் தீதியை (மம்தாவை) சந்திக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்காது’ என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பிற்குப் பின்னர் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார். சமாஜ்வாடி கட்சியின் தேசிய கூட்டத்திற்காக கொல்கத்தா வந்துள்ள அகிலேஷுடனான மம்தாவின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இவ்விரு முதல்வர்களும் சந்தித்து கொண்டது இதுவே முதல் முறை.
 
மம்தாவுடனான தனது சந்திப்பு பற்றி பேசிய அகிலேஷ், ‘மேற்குவங்க அரசானது மக்கள் விருப்பப்படி செயல்படுகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மம்தா ஆட்சிக்கு வந்துள்ளார். எனக்காக நேரம் ஒதுக்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
 
உத்தரபிரதேசத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அகிலேஷுடன் விவாதித்ததாகவும், அத்திட்டங்கள் மேற்குவங்கத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மம்தா கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சர்வதேச யோகா தினம்: பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட யோகா ....»