கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைந்தது || kerala this year southwest rain low
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க பிப்.21-ல் அனைத்துக்கட்சி கூட்டம்
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைந்தது
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைந்தது
திருவனந்தபுரம், செப். 12-
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் ஆரம்பத்தில் தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. என்றாலும் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக பெய்த மழை அதன் பின்பு சில வாரங்களுக்கு பெய்யாமல் ஏமாற்றியது.
 
ஒரு மாதம் கண்ணா மூச்சி காட்டிய மழை அதன் பின்பு வடகேரளா பகுதிகளில் பெய்யத் தொடங்கியது. ஆகஸ்டு மாத இறுதியில் மழை மீண்டும் தீவிரம் அடைந்தது. அது தென் கேரளாவுக்கும் பரவியது.  
 
காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் ஓரளவுக்கு பெய்த மழையால் கேரள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். என்றாலும் இந்த மழை வழக்கத்தை விட குறைவு என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது,
 
கேரளாவில் ஜூன் மாதம் முதல் இம் மாதம் 5-ந்தேதி வரை 1,413.5 மி.மீட்டர் மழையே பெய்து உள்ளது. கடந்த காலத்தில் இது 1,834.2 மி.மீட்டர் அளவுக்கு பெய்திருந்தது. இப்போது பெய்திருக்கும் மழையை ஒப்பிட்டுப் பார்த்தால் இது கடந்த ஆண்டை விட 23 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவு மழையும், வயநாடு மாவட்டத்தில் அதிகபட்ச மழையும் பெய்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கேரளாவில் பஸ் கட்டணம் குறைப்பு: டீசல் விலை குறைந்ததால் நடவடிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif