கடல் தண்ணீருக்குள் நின்று நாளை போராட்டம்: கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினர் திட்டம் || kudankulam protester plan to protest in sea tomorrow
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
கடல் தண்ணீருக்குள் நின்று நாளை போராட்டம்: கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினர் திட்டம்
கடல் தண்ணீருக்குள் நின்று நாளை போராட்டம்: கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினர் திட்டம்
கூடங்குளம்,செப்.12-
 
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
 
நேற்று சரண் அடைவதாக இருந்த உதயகுமார் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றி தொடர்ந்து போராட்டத்தை வழி நடத்த முன்வந்துள்ளார். அவரை சரண் அடைய வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாக கெஜ்ரிவால் கூறினார். ஆனால் உதயகுமார் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
 
இந்நிலையில் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நாளை முதல் தங்கள் போராட்ட உத்தியை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
 
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பக்கூடாது, போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்யக்கூடாது, போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடல் நீரில் இறங்கி போராட்டம் நடத்த போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
 
முதல்கட்டமாக நாளை காலை முதல் 10 முதல் மாலை 4 மணி வரை கடல் நீரில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாகவும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்போவதாகவும் போராட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா?: ஜக்கம்மாவிடம் குறி கேட்கும் தொண்டர்கள்

நல்ல காலம் பொறக்குது! தம்பிக்கு நல்ல காலம் பொறக்குது! ஜக்கம்மா சொல்றா...நம்பிக்கையே இல்லாதவனின் இதயம் கூட ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif