பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ விபத்து: சாவு எண்ணிக்கை 271 ஆக உயர்வு || Factory fires in Pakistan death toll rises to 271
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ விபத்து: சாவு எண்ணிக்கை 271 ஆக உயர்வு
பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ விபத்து: சாவு எண்ணிக்கை 271 ஆக உயர்வு
கராச்சி,செப்.12-
 
பாகிஸ்தானில் இரண்டு தொழிற்சாலைகளில் நடந்த தீ விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
 
பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர்.
 
ஆனால் ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் தரைத்தளத்தில் இருந்த ஊழியர்களால் வெளியேற முடியவில்லை. பலர் புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்தனர். தீயில் கருகியும் பலர் மடிந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று பிற்பகல் நிலவரப்படி 246 பேர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
 
இதேபோல் நேற்று இரவு லாகூரில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், அவரது மகன் உள்பட 25 பேர் இறந்தனர். அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
 
இதையடுத்து மீட்புக்குழுவினர் சுவரில் துளை போட்டு அனைவரையும் வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
 
இவ்வாறு ஒரே நாளில் இரண்டு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால், இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இதுபற்றி மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்

நியூயார்க், பிப். 12–அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் நடந்தது.எச்.ஐ.வி. ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif