ரஷ்யாவில் விமான விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி || Ten dead in plane crash in Russian Far East
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
ரஷ்யாவில் விமான விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி
ரஷ்யாவில் விமான விபத்து: குழந்தை உள்பட 10 பேர் பலி
மாஸ்கோ,செப்.12-
 
ரஷ்யாவின் தொழில் நகரமான பெட்ரோபாவ்லாஸ்க்-காம்சாட்ஸ்கிலிருந்து பலானாவுக்கு ஆன்-28 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் சென்றது. இதில் 12 பயணிகள், 2 விமானிகள் இருந்தனர்.
 
பலானா விமான நிலையத்தை நெருங்கியபோது இந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், மீட்பு ஹெலிகாப்டரை அனுப்பி தேடினர். அப்போது பலானாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
 
உடனே மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்குச் சென்றனர். நொறுங்கிய விமானத்தின் உள்ளே ஒரு குழந்தை உள்பட 10 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக விமானத்தின் ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்க விமானி முயன்றபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

2 ஆண்டுகள் புதிய வக்கீல்கள் பணியாற்ற முடியாது என்ற உத்தரவு: பார் கவுன்சில் செயலாளருக்கு நோட்டீசு

சென்னை, நவ.24–சென்னை ஐகோர்ட்டில், அக்சை மணி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–அகில இந்திய பார் ....»