மயிலாடியில் இளம்பெண் அடித்து கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் || Mayiladi young girl murder refused body to relatives protest
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
மயிலாடியில் இளம்பெண் அடித்து கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மயிலாடியில் இளம்பெண் அடித்து கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நாகர்கோவில், செப். 12-

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ரவி. அங்கு வெல்டிங் பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் புத்தளத்தைச் சேர்ந்த விஜி (வயது 27) என்பவருக்கும் கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ரவி மற்றும் அவரது குடும்பத்தார் விஜியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் விஜி குடும்பத்தார் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தனர். மேலும் கணவரை விட்டு பிரிந்து கடந்த 6 மாதங்களாக பெற்றோர் வீட்டில் விஜி இருந்து வந்தார்.

இதனிடையே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவர் ரவியுடன் விஜி சேர்ந்து வாழத் தொடங்கினார். ஆனால் அதன் பின்பும் ரவியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு விஜியை கொடுமைப்படுத்தினர். இதனால் மனம் உடைந்த விஜி தனது பெற்றோருக்கு போன் செய்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும், கொன்று விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே உடனே தன்னை அழைத்துச் செல்லுமாறும் போனில் கூறினார். இதற்கிடையே நேற்று விஜி தூக்கில் தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு ரவியின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு பதறியடித்து ரவியின் வீட்டுக்கு விஜியின் பெற்றோர் அந்தோணி மிக்கேல், பஞ்சவர்ணக்கிளி மற்றும் உறவினர்கள் வந்தனர். அப்போது விஜியின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அஞ்சு கிராமம் போலீசில் புகார் செய்த விஜியின் பெற்றோர் தங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். மேலும் விஜியின் தாய் பஞ்சவர்ணக்கிளி போலீசில் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:-

ரூ.1 லட்சம் பணம் எங்கள் மகள் விஜியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ரவியும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தனர். சம்பவத்தன்று அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் எனக்கேட்டு விஜியை கணவர் ரவி சித்ரவதை செய்துள்ளார். நேற்றும் அடித்து உதைத்து உள்ளார். இதை தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத் தோம். ஆனாலும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். இதனால் விஜி எங்களுக்கு போன் செய்து தன்னை கொன்று விடுவதாக கணவர் குடும்பத்தார் மிரட்டுவதாக தெரிவித்தார். நடவடிக்கை இந்த நிலையில்தான் விஜி தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது. அவரை கணவர் ரவி மற்றும் அவரது குடும்பத்தார் அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே ரவி மற்றும் உறவினர்கள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

திருமணம் முடிந்து 1 1/2 ஆண்டுகளாகவே ஆவதால் விஜியின் மரணம் குறித்து நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சங்கர்லால் குமாவத் விசாரணை நடத்தி வருகிறார். உடலை வாங்க மறுத்து போராட்டம் இதனிடையே ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனை முடிந்த விஜியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விஜியின் கணவர் ரவி மற்றும் உறவினர்கள் 7 பேரை கைது செய்வதுடன் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று கூறினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

களக்காடு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்

களக்காடு மலையடிவாரத்தில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் களக்காடு அருகே ....»