லிபியாவில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் 3 அதிகாரிகள் பலி || american empassay attack in equipt and libiya
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
லிபியாவில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் - 3 அதிகாரிகள் பலி
லிபியாவில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் - 3 அதிகாரிகள் பலி
பெங்காசி, செப். 12-

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல் தினமான நேற்று புளோரிடாவில் போதகர் ஜோன்ஸ் ஒரு குறும்படத்தை வெளியிட்டார். அதில், நபிகள் நாயகத்தை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் இஸ்லாம் மதத் தலைவர் முகமது நபியை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதனைக் கண்டித்து லிபியா மற்றும் எகிப்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் திடீரென புகுந்தது தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தியதுடன், ராக்கெட் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தூரதகம் பற்றி எரிந்தது.

இந்த திடீர் தாக்குதலில் அமெரிக்க தூதர் ஸ்டீவன் மற்றும் 3 தூதரக ஊழியர்கள் பலியானார்கள். தூதரக அலுவலகம் முற்றிலும் எரிந்து நாசமானது. முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின.

லிபியாவை தொடர்ந்து எகிப்திலும் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஆவேசத்துடன் ஒரு கும்பல் புறப்பட்டு சென்றது. அங்கு தூதரகத்தின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி அமெரிக்க கொடியை கீழே இறக்கி அகற்றினர். பின்னர் கருப்பு கொடியை ஏற்றினர்.

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

வங்காளதேசத்தில் இணையதளத்தில் மிரட்டல் விடுத்த தீவிரவாதி கைது

வங்காளதேசத்தில் கடந்த பல மாதங்களாக ஐ.எஸ். தீவிரவாதி என்ற பெயரில் ஒருவர், சமூகத்தில் பல்வேறு பிரமுகர்களுக்கு ....»