கூடங்குளம் துப்பாக்கி சூட்டுக்கு தமிழக அரசே பொறுப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு || Koodankulam gun shoot tamilnadu rule karunanidhi complaint
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
கூடங்குளம் துப்பாக்கி சூட்டுக்கு தமிழக அரசே பொறுப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு
கூடங்குளம் துப்பாக்கி சூட்டுக்கு தமிழக அரசே பொறுப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை, செப்.12-

திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கடந்த மூன்று நாட்களாக கூடங்குளத்தில் கலவரம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை துப்பாக்கி சூடு வரை நடத்தியிருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இதுபோன்ற எல்லாவற்றையும் இணைத்து, கூடங்குளம் சம்பவம் குறித்து ஓர் அறிக்கையை விரிவாக இன்று காலையில் கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தவர்கள், ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்.

கேள்வி:- போராட்டக்காரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:- அதைப்பற்றியும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி:- மத்திய அரசும், மாநில அரசும் இந்தப் பிரச்சினையை எப்படி அணுக வேண்டும்?

பதில்:- அதையும் அந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

கேள்வி:- இலங்கை அகதிகள் எல்லாம் முகாம்களிலிருந்து இந்த அரசு எதுவும் உதவி செய்யவில்லை என்று கூறி வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- இதற்கு தமிழக அரசு தான் பதில் கூறவேண்டும்.

கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே ஒரு மீனவர் மீது துப்பாக்கி 2 சூடு நடத்தி கொன்றிருக்கிறதே? உங்கள் அறிக்கையிலே அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் அதைப்பற்றி உங்கள் கருத்து?

பதில்:- கூடங்குளத்தில் துப்பாக்கி பிரயோகம் வரை நடந்து முடிந்திருக்கிறது. காவல் துறையினரின் அத்துமீறலும் நடந்திருக்கிறது. அமைதியான முறையில் உண்ணா நோன்பு இருந்தவர்களிடத்தில் - சாத்வீகமான முறையில் இருந்தவர்களிடத்தில் - அவர்களை அடக்குவதற்காக அடக்குமுறைகளை ஏவி இப்படி காவல் துறை நடந்து கொண்டுள்ளது. அதற்கும் இந்த தமிழக அரசு தான் பொறுப்பாகும்.

கேள்வி:- மத்திய அரசில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. தி.மு.க.விற்கு புதிய வாய்ப்போ, இலாகா மாற்றமோ வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

பதில்:- நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

கேள்வி:- கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்களும் கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- ரசிகர் என்பதற்காக அல்ல; பொதுவாக விளையாட்டுகள் உலகத்தில் பல நாடுகளில் நடைபெறுவதை ஆதரிப்பவன் நான்.

கேள்வி:- அண்ணா வளைவினை அகற்றுவதற்கான முடிவினை தான் எடுக்கவில்லை என்றும், கடந்தகால தி.மு.க. ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சொல்கிறாரே?

கேள்வி:- இது பெரிய பொய்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif