தாராபுரத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை || Municipal office blockade by womens in Tharapuram
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
தாராபுரத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
தாராபுரத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
தாராபுரம், செப். 12-

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30-வார்டுகளில் 11-வது வார்டாக சொக்கநாதபாளையம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 11-வது வார்டு கவுன்சிலராக மெகர்னிசா (அ.தி.மு.க.) உள்ளார். சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு சென்று நகராட்சி தலைவர் அறையை முற்றுகையிட்டனர்.
 
எங்களுக்கு குடிநீர் மற்றும் ஆழ்குழாய் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை. நகராட்சி கழிவறை கடந்த 3 மாதமாக பூட்டிக் கிடக்கிறது. அதேபோல் ஆழ்குழாய் கிணற்றுக்கு உரிய மின் மோட்டாரும் பூட்டிக் கிடக்கிறது. இவற்றுக்கு கவுன்சிலரே காரணம். எங்களுக்கு உடனே குடிநீர் வழங்க வேண்டும். பூட்டிக் கிடக்கும் கழிவறை மற்றும் ஆழ்குழாய் மோட்டார் அறையை திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
அவர்களை நகர்மன்ற தலைவர் கலாவதி சமாதானம் செய்தார். பின்னர் ஆழ்குழாய் கிணற்றுக்கான சாவியை கவுன்சிலரிடம் இருந்து வாங்கி பொதுமக்களிடம் கொடுத்து சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif