சென்னை டி 20 கிரிக்கெட்: ஒரு ரன்னில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா || chennai vs new zealand t20 cricket
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
சென்னை டி-20 கிரிக்கெட்: ஒரு ரன்னில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா
சென்னை டி-20 கிரிக்கெட்: ஒரு ரன்னில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா
சென்னை,செப். 11-
 
 
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.
 
இப்போட்டியில் சேவாக்  இடம்பெறவில்லை. இதேபோல் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங்கும் களமிறங்கவில்லை.புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த யுவராஜ்சிங் இன்று முதல் முறையாக களமிறங்கினார்.
 
டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தது. துவக்க வீரர்களாக நிகோல், குப்தில் களமிறங்கினர். ரன் எதுவும் எடுக்காத நிகோல், ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். அடுத்த ஓவரில் குப்தில்(1) ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை பதான் கைப்பற்றினார். 2 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து பறிகொடுத்தது.
 
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில்லியம்சன், மெக்கல்லம் இருவரும் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
 
26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த வில்லியம்சன், பதான் பந்தில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய மெக்கல்லம், 55 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 91 ரன்கள் விளாசினார். அவரது விக்கெட்டையும் பதான் கைப்பற்றினார்.அடுத்து வந்த பிராங்ளின் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
இதனால் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. டெய்லர் 25 ரன்களுடனும், ஓரம் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்தியா தரப்பில் பதான் 3 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், பாலாஜி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.நீண்ட இடைவெளிக்குப்பிறகு விளையாடிய யுவராஜ்சிங் 2 ஓவர்கள் பந்து வீசினார்.
 
168 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியாவின் துவக்க வீரர்களாக காம்பிர், கோலி களமிறங்கினர். காம்பீர் 3 ரன்னிலும், அவருக்குப் பின்னர் வந்த ரெய்னா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
அதன்பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் களமிறங்கினார். எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, கோலியுடன் இணைந்து யுவராஜ் நேர்த்தியாக ஆடினார். அரைசதம் அடித்த கோலி 70 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர் களம்புகுந்த டோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று மெதுவாக ஆடியதால் ஆட்டத்தின் வேகம் தடைபட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. முதல் மூன்று பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 4-வது பந்தில் யுவராஜ் (34 ரன்) வெளியேறினார்.கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய ரோகித் இரு பந்துகளிலும் தலா இரண்டு ரன் என, மொத்தம் 4 ரன்கள் மட்டுமே அடித்தார்.
 
இதனால் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையிலிருந்த இந்திய அணி டோனி-யுவராஜ் ஜோடியின் மெத்தனமான ஆட்டத்தால் கடைசி 9 பந்துகளில் 21 ரன் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
 
இடைப்பட்ட 21 பந்துகளில் இந்த ஜோடி வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற இந்தியாவின் சோகம் இப்போதும் தொடர்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு: சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif