மந்திரிகள் அதிகாரிகள் வெளிநாட்டு பயண விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு || ministers and officers must give details about foreign travels central government order
Logo
சென்னை 01-09-2015 (செவ்வாய்க்கிழமை)
  • எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்
  • தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
மந்திரிகள்-அதிகாரிகள் வெளிநாட்டு பயண விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
மந்திரிகள்-அதிகாரிகள் வெளிநாட்டு பயண விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி,செப்.11-
 
மத்திய மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தாங்கள் அலுவல் சம்பந்தமாக மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் குறித்த நோக்கம், பார்வையிட்ட இடங்கள், எத்தனை நாட்கள் சென்றனர், உடன் சென்றவர்கள் குறித்த விவரங்கள், பயணத்தின் மொத்த செலவு ஆகியவை பற்றிய விவரங்களை அளிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இதுகுறித்த அறிக்கை மந்திரிகள், மந்திரி சபை அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை அலுவலக உயர் அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 4-ஆம் பிரிவின் கீழ் அனைத்து பொதுத்துறை வட்டாரங்கள் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு முறைப்பயணம் குறித்து விவரங்களை கடந்த 2012, ஜனவரி மாதம் முதல் வழங்க அறிவுறுத்தப்படுகின்றன.
 
இந்த அறிவிப்பை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2012, ஜீலை மாதம் முதல் ஒவ்வொரு காலாண்டுக்கும் பயண விவரங்கள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த அரசுமுறைப் பயணம் குறித்த விவரங்கள் இணைய தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட உள்ளது. அதனால் குறிப்பிட்ட காலங்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் விவரங்களை தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு மத்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்களான ரா, ஐ.பி. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தாது. ஏனெனில் இந்த அமைப்புகள் தகவல் அறியும் சட்ட வரம்பிற்குள் வரவில்லை.
 
இதுதவிர அரசு மற்றும் பொதுத்துறைகளை கண்காணிக்கும் தலைமை கண்காணிப்பு அலுவலர்களுக்கும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் அறியும் பிரிவுச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பொன்னேரி, ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் மின்சாரம் திருட்டு: மின்சார வாரிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் ....»

amarprash.gif