மெட்ராஸ் ஐகோர்ட்டு 20 || chennai high court 20
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
மெட்ராஸ் ஐகோர்ட்டு-20
மெட்ராஸ் ஐகோர்ட்டு-20

 
1.சென்னை ஐகோர்ட்டு கட்டப்பட்டுள்ள இடத்தில் ஆதிகாலத்தில் புகழ்பெற்ற சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்தது. 1648-ல் கட்டப்பட்ட அதை எடுத்து வேறு இடத்தில் அமைத்துவிட்டு கோர்ட்டை கட்டினார்கள்.
 
2. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் மிகப்பெரிய நாகலிங்க மரம் உள்ளது. அங்கு சிவாலயம் இருந்ததற்கு ஆதாரமாக இந்த விருட்சம் கருதப்படுகிறது.
 
3. மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆங்கிலம் கட்டாய மொழியாக உள்ளது.
 
4. மெட்ராஸ் ஐகோர்ட்டின் கீழ் இயங்கும் இதர கோர்ட்டுகளில் எல்லா நடைமுறைகளும் தமிழில் தான் நடக்கிறது. தமிழிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
 
5. ஐகோர்ட் கட்டிடம் இந்தோ- சரசெனிக் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது.
 
6. மெட்ராஸ் ஐகோர்ட்டின் 100-வது ஆண்டு விழா 1962-ம் ஆண்டும்,
125-வது ஆண்டு விழா 1987-ம் ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
7. ஐகோர்ட் 150-வது ஆண்டு விழா கொண்டாட்ட நினைவாக தெற்கு நுழைவாயில் பிரமாண்ட ஆர்ச் கட்ட திட்ட மிட்டுள் ளனர்.
 
8. ஐகோர்ட் மிïசியத்துக்கென தனி கட்டிடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
9. ஐகோர்ட்டை கட்டிய கட்டிடக் கலை நிபுணரின் பெயர் ஹென்றி இர்வின். அயர்லாந்தில் 1841-ல் பிறந்த இவர் 1886-ல் பிரிட்டிஸ் இந்திய பொதுப்பணித்துறையில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மியூசியம், சென்டிரல் ரெயில் நிலையம், சட்டக்கல்லூரி, ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக கட்டிடம், இந்து உயர்நிலைப்பள்ளி, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி ஆகியவை இவரது கைவண்ணத்தில் உருவானவைகளாகும்.
 
10. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தை கட்டி முடிக்க ஹென்றி இர்வின் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.
 
11. ஐகோர்ட் கட்டிடத்தில் உள்ள கூம்புகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு இது உலகம் முழுவதும் பேசப்பட்டது.
 
12. ஐகோர்ட் கட்டிட ஜன்னல் வளைவுகளில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பொருத்தப்பட்ட கண் கவர் கண்ணாடிகள் இன்றளவும் உள்ளன.
 
13. ஐகோர்ட் கட்டிட ஒரு கூம்பு வடிவம் கடல் மட்டத்தில் இருந்து 160 அடி உயரத்தில் உள்ளது.
 
14. ஐகோர்ட் வளாக கூம்பு வடிவ கட்டிடத்தில் 1894-ம் ஆண்டு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. அதில் ஏறி நகரின் முழு அழகையும் தசித்து பார்க்க முதலில் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 
15. ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாநில சட்ட உதவி மையத்தில் தினமும் 3 தடவை ஆலோசனை வழங்கப்படுகிறது.
 
16. கோர்ட் வழக்குகளில் உதவிகள் பெற தமிழ்நாடு முழுவதும் 167 இடங்களில் ஆலோசனை மையங்கள் உள்ளன. பெண்களுக்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாக 53 ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.
 
17. மெட்ராஸ் ஐகோர்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஜ×டிசியல் அகாடமி எழும்பூரில் 23.4.2001 முதல் இயங்கி வருகிறது.
 
18. மெட்ராஸ் ஐகோர்ட் வளாகம், உலகின் 2-வது பெரிய நீதிமன்ற வளாகமாகும்.
 
19. மெட்ராஸ் ஐகோர்ட்டில் முதன் முதலாக நீதிபதி பதவி ஏற்றவர் முத்துசுவாமி அய்யர் ஆவார்.
 
20. மெட்ராஸ் என்ற பெயர் 1996-ல் சென்னை என்று மாறியது. ஆனால் பழமை சிறப்பு கருதி மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் அப்படியே நீடிக்க அனுமதிக்கப்பட்டது.
Newbharath.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை