பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் உதவி கலெக்டர் சோதனை: மறு உத்தரவு வரும் வரை குவாரியை இயக்க தடை விதிப்பு || Assistant Collector of PRP Granite quarrying test a rerun was ordered to ban quarrying
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் உதவி கலெக்டர் சோதனை: மறு உத்தரவு வரும் வரை குவாரியை இயக்க தடை விதிப்பு
பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் உதவி கலெக்டர் சோதனை: மறு உத்தரவு வரும் வரை குவாரியை இயக்க தடை விதிப்பு
பரமத்திவேலூர், செப். 1-

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே சிறு கிணத்துப்பாளையம் பகுதி கிராமத்தில் மதுரை பி.ஆர்.பி.  எக்ஸ்போர்ட்ஸ், பி.ஆர்.பி. கிரானைட்ஸ் என்ற 2 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

சுமார் 22 ஏக்கரில் இந்த குவாரி நிலம் அமைந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இதனிடையே பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பி.ஆர். பழனிச்சாமி கைதானதால் அவருக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அவரது  சொத்துக்களும் முடக்கப்பட்டது. இதேபோல சிறு கிணத்துப் பாளையத்தில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்திலும் பணிகள் நடைபெறாமல் குவாரி முடங்கியது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜெ.குமர குருபரன் உத்தரவின்படி திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவிதா, பரமத்தி வேலூர் தாசில்தார் முத்துசாமி மற்றும் வருவாய் துறையினர் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது கனிம சுரங்க அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் முறையான ஆவணங்கள் எதையும் காட்டவில்லை. அலுவலகத்திலும் எவ்விதமான ஆவணங்களும் இல்லை. எனவே மாவட்ட கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை குவாரியை இயக்கக் கூடாது என கூறி தடை விதித்தனர். அதற்கான ஆணையையும் குவாரியில் ஒட்டினர்.

இதுதொடர்பாக திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவிதா கூறியதாவது:-

கபிலர் மலை அருகே உள்ள பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு தேனி மாவட்டம் கரட்டுப் பட்டியை சேர்ந்த மாசாண்ணத் தேவர் மகன் காந்தி என்பவரது பெயரில் பட்டா உள்ளது.

அவரிடம் இருந்து பி.ஆர்.பி. நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட்ஸ் கற்கள் வெட்டி எடுக்க அனுமதி பெற்று கற்களை வெட்டி எடுத்து வந்துள்ளனர்.

மாவட்ட கலெக்டரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த குவாரியில் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பரமத்தி வேலூர் மண்டல துணை தாசில்தார் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மனோகரன், ஜேடர் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif