விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு || accident dead family 1 lakh help jeyalalitha announcement
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு
விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக.31-

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 28.8.2012 அன்று அய்யங்கோட்டை கிராமம், சித்தாலங்குடி பிரிவு அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமம் அருகே 30.8.2012  அன்று சங்கரன்கோயிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில், வேன் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் பேருந்தில் பயணம் செய்த ராஜபாளையம் வட்டம், செட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த சுரேஷ், கனகராஜ் மற்றும் வேல்ராஜ் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 20 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif