தங்க நகைகளுக்கு ஹால்மாக் முத்திரை கட்டாயம்: பாராளுமன்றத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் || Make gold hallmarking mandatory CAG to Govt
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
தங்க நகைகளுக்கு ஹால்மாக் முத்திரை கட்டாயம்: பாராளுமன்றத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்
தங்க நகைகளுக்கு ஹால்மாக் முத்திரை கட்டாயம்: பாராளுமன்றத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்
புதுடெல்லி, ஆக.30-
 
நுகர்வோர் தரமற்ற தங்கத்தை வாங்கி ஏமாந்துவிடாமல் இருக்கும் வகையில், தங்க நகைகளுக்கு கட்டாயமாக தரக்குறியீடு பொறிக்கப்பட வேண்டும். இதுபற்றி தங்க நகை உற்பத்தியாளர்களை அரசு வற்புறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய கணக்கு தணிக்கை குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
 
விலை மதிப்பற்ற தங்க நகைகளை வாங்கும்போது அது தரமானதா, இல்லையா? என்பதை சாதாரண மக்கள் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இந்த தங்கம் சுத்த தங்கம்தான் என்பதற்கு வழங்கப்படும் சான்றுதான் ஹால்மார்க் எனப்படும் தரக்குறியீடு.
 
இந்த ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட தரமான நகைகளை, தற்போது ஒரு சில உற்பத்தியாளர்கள் மட்டுமே தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
 
நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைப்பு(பி.ஐ.எஸ்), ஹால்மார்க் தரச்சான்று வழங்கி வருகிறது. இந்நிலையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரக்குறியீட்டை கட்டாயமாக்க நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் தரநிர்ணய அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய கணக்கு தணிக்கை குழு இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. 
 
அதில், பி.ஐ.எஸ். அமைப்பின் தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்யப்படாததால், ஹால்மார்க் சான்றை கட்டாயமாக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே, தங்கம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு ஹால்மார்க் தரச்சான்றை கட்டாயமாக்கும் பி.ஐ.எஸ். சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 26–ந் தேதி தேநீர் விருந்து

புதுடெல்லி, அக்.23 மராட்டியம் மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif