அடுத்த மாதம் மத்திய மந்திரிசபையில் அதிரடி மாற்றம்: ஜெயபால்ரெட்டி ஆந்திர முதல் மந்திரியாகிறார் || next month central cabinet change jayapal reddy andhra chief minister
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
  • காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை
  • மத்திய குழு சென்னை வந்தது: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது
அடுத்த மாதம் மத்திய மந்திரிசபையில் அதிரடி மாற்றம்: ஜெயபால்ரெட்டி ஆந்திர முதல்-மந்திரியாகிறார்
அடுத்த மாதம் மத்திய மந்திரிசபையில் அதிரடி மாற்றம்: ஜெயபால்ரெட்டி ஆந்திர முதல்-மந்திரியாகிறார்
புதுடெல்லி, ஆக. 30-

2013-ம் ஆண்டு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டுவர காங்கிரஸ் கட்சி திட்ட மிட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக மத்திய மந்திரி சபையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளார்.

தற்போது மந்திரி பொறுப்பு வகிக்கும் பலரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் அவர்களை மாற்றவும், மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்தும் வகையில் சிலரை கட்சி பணிக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன் மோகன்சிங்கும் ஆலோசனை நடத்தினார்கள். சில மாதங்களுக்கு முன் 5 மாநில தேர்தல் முடிந்ததும் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் வந்ததால் மாற்றம் நடைபெறவில்லை. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆனதும் சிறிய அளவில் இலாகா மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. பிரணாப்முகர்ஜி வகித்த நிதி மந்திரி பொறுப்புக்கு ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டார். அவர் கவனித்த உள்துறை மந்திரி பொறுப்புக்கு சுஷில்குமார் ஷிண்டேயும், மின்சார மந்திரியாக வீரப்ப மொய்லியும் மாற்றம் செய்யப்பட்டனர்.

பல்வேறு புகார்களால் பதவி விலகிய மந்திரிகளுக்கு பதில் புதிய மந்திரிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. சமீபத்தில் மரணம் அடைந்த விலாஸ்ராவ் தேஷ்முக்குக்குப் பதில் புதிய மந்திரி நியமிக்கப்படவில்லை. இந்த இலாகாக்களை மற்ற மந்திரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே விரைவில் பெரிய அளவில் மந்திரி சபை மாற்றம் செய்ய மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் நாடு திரும்பியதும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 15-ந்தேதிக் குள் மந்திரிசபையில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய மந்திரிசபை மாற்றத்தின் போது சில மந்திரிகள் நீக்கப்படுகிறார்கள் . எஸ்.எம். கிருஷ்ணா செயல்பாடுகளில் பிரதமர் அதிருப்தி அடைந்து இருப்பதால் அவர் மாநில அரசியலுக்கு அனுப்பப்படுவார். அவர் இலங்கை தமிழர் பிரச்சினையை சரியாக கையாளாததால் மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அதிருப்தி நிலவுகிறது. அவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இதேபோல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி வெளியேற்றப்பட்டதால் உள்கட்சி குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதல் - மந்திரி கிரண்குமார் ரெட்டியால் கோஷ்டி அரசியலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே மத்திய மந்திரி ஜெயபால் ரெட்டியை ஆந்திர முதல் - மந்திரியாக நியமிக்கலாமா? என பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.எம். கிருஷ்ணா கவனித்து வரும் வெளியுறவுத்துறைக்கும், ஜெயபால்ரெட்டி கவனிக்கும் பெட்ரோலிய துறைக்கும் புதிய மந்திரிகள் நியமிக்கப்படுகிறார்கள். எஸ்.எம். கிருஷ்ணா மாற்றப்பட்டால் அவருக்கு பதில் ஆனந்த் சர்மா வெளியுறவு மந்திரியாவார். சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் குலாம்நபி ஆசாத் பெட்ரோலியத்துறை மந்திரியாக நியமிக்கப்படலாம். அல்லது வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிக்கும் மின்சார துறை அவருக்கு வழங்கப்படலாம். தகவல் தொடர்பு மந்திரி அம்பிகா சோனி, சாலை போக்குவரத்து மந்திரி சி.பி. ஜோஷி ஆகியோரது இலாகாக்கள் மாற்றம் செய்யப்படுகிறது.

அம்பிகா சோனிக்கு வேறு இலாகா ஒதுக்கப்படும். ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு (2013) சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் சி.பி. ஜோஷி கட்சி பணிக்கு அனுப்பப்படுகிறார். ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மின்சாரத்துறை அல்லது வேறு இலாகாவுக்கு மாற்றப்படலாம். ஆனால் அவருக்கு மின்சாரத்துறை வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்தபோது சர்ச்சையில் சிக்கினார். இப்போதும் ஊரக வளர்ச்சி துறையில் பிரதமரின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது.

எனவே அவருக்கு மின்சார துறை வழங்கப்பட்டால் தொழில்துறை பாதிக்கப்படும் என்றும் அவருக்கு மின்சார துறையை தவிர வேறு இலாகா கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக துறை இணை மந்திரியாக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் செயல்பாடு சரியில்லாததால் அவர் நீக்கப்படலாம். அஸ்வினிகுமார் சிந்தியா தனிப் பொறுப்புடன் கூடிய இணை மந்திரியாக அந்த இலாகாவுக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கபில்சிபில் மனித வளத்துறையுடன், தொலைத் தொடர்பு துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அவரது இலாகாவும் மாற்றம் செய்யப்படலாம். நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி கமல்நாத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாகா கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர புது மந்திரிகள் பலரும் நியமிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் மனிஷ்திவாரி, ரேணுகா சவுத்ரி ஆகியோர் மந்திரியாகும் வாய்ப்பு உள்ளது.

மந்திரிசபை மாற்றத்தின் போது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகதா சங்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் தாரிக் அன்வார் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ரத்தக்கறை படிந்த 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல்: 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று

166 அப்பாவி மக்களை பலிகொண்ட 26/11 மும்பை வெடிகுண்டு தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினம் ....»