கல்வித்தகுதியை தவறாக குறிப்பிட்டதாக குப்பன் எம்.எல்.ஏ. மீதான வழக்குகள் தள்ளுபடி || education qualification kuppan mla case dismisses
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
கல்வித்தகுதியை தவறாக குறிப்பிட்டதாக குப்பன் எம்.எல்.ஏ. மீதான வழக்குகள் தள்ளுபடி
கல்வித்தகுதியை தவறாக குறிப்பிட்டதாக குப்பன் எம்.எல்.ஏ. மீதான வழக்குகள் தள்ளுபடி
திருவொற்றியூர், ஆக. 29-

கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.குப்பன் நிறுத்தப்பட்டிருந்தார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட குப்பன் என்பவர், அ.தி.மு.க. வேட்பாளர் குப்பன் தனது கல்வி தகுதியை தவறாக குறிப்பிட்டுள்ளார். எனவே அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

குப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் விழும் வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் மற்றொரு வழக்கு போட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், ஆறுமுகசாமி முன்பு நடந்தது.

தேர்தல் முடிந்து, குப்பன் எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கே.குப்பன் எம்.எல்.ஏ. சார்பில் வக்கீல்கள் பாபு, சுதாகர் ஆகியோர் ஆஜரானார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

Maalaimalar.gif
Maalaimalar.gif