தற்கொலைக்கு முயலவில்லை: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் சுஜிபாலா || dont try suicide no act after marraige sujubala
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
தற்கொலைக்கு முயலவில்லை: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்- சுஜிபாலா
தற்கொலைக்கு முயலவில்லை: திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்- சுஜிபாலா
நாகர்கோவில், ஆக.28-
 
அய்யாவழி, சந்திரமுகி, கோரிப்பாளையும், முத்துக்கு முத்தாக உள்பட பல படங்களில் நடித்தவர் சுஜிபாலா. நாகர்கோவில் வைத்திய நாதபுரத்தை சேர்ந்த இவர் `உண்மை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார், சுஜிபாலாவை திருமணம் செய்ய விரும்பினார்.  பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜுலை 5-ந்தேதி சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் ஈத்தாமொழியில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
இந்தநிலையில் சுஜிபாலா மயக்க நிலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
 
இதை மறுத்து சுஜிபாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நான் தற்கொலை செய்ய முயலவில்லை. தலைவலி மற்றும் காய்ச்சலாக இருந்ததால் எனது தாயாரிடம் மாத்திரை கேட்டேன். அவர் நீயே எடுத்துக்கொள் என கூறிவிட்டார். நான் மாத்திரை தெரியாமல் பவர் கூடிய 2 மாத்திரைகளை தின்றுவிட்டேன். இதனால் மயக்கமடைந்து விழுந்தேன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டேன்.
 
சினிமா துறையில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கும், நடன இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்பதெல்லாம் உண்மை இல்லை. எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாகவில்லை. முடிவானதும் பத்திரிகைகள், மீடியாக்களிடம் தெரிவிப்போம். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.
 
நான் தற்போது டைரக்டர் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா 303 ரன்னில் ஆல்-அவுட்

பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif