நாளை மறுநாள் ஓணம்: ஆட்டம், பாட்டத்துடன் களை கட்டும் கேரளா || day after tomorrow onam kerala people celebration
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
நாளை மறுநாள் ஓணம்: ஆட்டம், பாட்டத்துடன் களை கட்டும் கேரளா
நாளை மறுநாள் ஓணம்: ஆட்டம், பாட்டத்துடன் களை கட்டும் கேரளா
ஓணப் பண்டிகை... கேரள மக்களின் வசந்த விழா.
 
மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் `அஸ்தம்' நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் இவ்விழாவை மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
 
இவ்விழாவுக்கு என ஒரு புராதன சிறப்பு உண்டு. அது, கேரளாவை ஆண்ட மகாபலி என்ற மன்னன் இறை நம்பிக்கையில் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் திருமால் வாமன அவதாரம் எடுத்து வந்து தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என்று வரம் கேட்டார். மகாபலியும் மகிழ்வுடன் அதை தர சம்மதித்தார். அப்போது விஸ்வரூபமாக காட்சியளித்த வாமனன் முதல் அடியில் பூமியையும், அடுத்த அடியில் விண்ணையும் அளந்து முடிக்க 3-வது அடிக்கு இடமில்லாமல் தூக்கிய கால்களுடன் மன்னனை பார்த்தார்.
 
உடனே மன்னன் மகாபலி வாமனரின் 3-வது அடியை தனது தலைமேல் வைக்க சிரம் தாழ்த்தி நின்றார். இறை அவதாரமான வாமனர் 3-வது அடியை மன்னனின் தலையில் வைக்கவே அவர் பூமியை பிளந்து பாதாள லோகம் சென்றார். மகாபலி மன்னனின் இப்பணிவை கண்டு உள்ளம் மகிழ்ந்த திருமால் அவருக்கு வேண்டும் வரத்தை தருவதாக அருளினார். அப்போது மன்னன் ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில் மக்களை காண வரம் அருளும்படி வேண்டினார். `அவ்வாறே ஆகட்டும்' என்று கூறி திருமால் மறைந்தார்.
 
இறைவன் கொடுத்த வரத்தின்படிதான் ஆண்ட நாட்டு மக்களை சந்திக்க வரும் தினத்தைதான் கேரள மக்கள் திருவோண திருநாளாக கொண்டாடுகிறார்கள் என்பது புராண கால வரலாறு. இப்படி மக்களை சந்திக்க வரும் மன்னனை வரவேற்கவே வீடுகள் முன்பு பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரிக்கிறார்கள்.
 
10 நாட்களும் பத்து விதமான அலங்காரங்களுடன் ஓணம் களை கட்டும். முதல் நாளை அத்தம் என்றும், 2-ம் நாள் சித்ரா, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள் அனுசம், 6-ம் நாள் திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம், 10-ம் நாள் திருவோணம் என கொண்டாட்டங்கள் களை கட்டும். 5-ம் நாளான அனுசம் அன்று கேரள மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான படகு போட்டி நடைபெறும் அப்போது வஞ்சிப்பாட்டு பாடி நதிகளில் அவர்கள் படகு விடும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
 
`காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடேனும்' என்பது கேரள மக்களின் ஐதீகம். எனவே ஏழையாக இருந்தாலும் ஓணப் பண்டிகை அன்று அறுசுவை உணவு தயாரித்து அதனை அக்கம்பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் வழங்கி மகிழ்வார்கள். ஓண விருந்தில் அடை, அவியல், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், துவரம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புலி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய் என இந்த விருந்து நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு சுவையாக இருக்கும்.
 
விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் கூடி ஆடும் விளையாட்டுக்கும் குறைவிருக்காது. புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும். இறுதியில் யானைகளுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து அவற்றை வீதியில் ஊர்வலமாக அழைத்து வந்து ஓணப் பண்டிகையை நிறைவு செய்வார்கள்.
 
இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்று(8-ம் நாள்) கொண்டாட்டமான பூராடம் திருநாள் நடக்கிறது. நாளை உத்திராடம் திருநாள் உற்சாகமாக நடக் கிறது. இதையொட்டி கேரள அரசின் சார்பில் கலாச்சார நடனங்களும், ஊர்வலங்களும் நடக்கிறது. மாநிலம் எங்கும் உள்ள அரசு அலுவல கங்கள் மற்றும் வீடுகள் மின் ஒளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
 
இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் கேரள மக்களும் ஓணத்தை கொண்டாட ஊருக்கு வந்துவிடுவது உண்டு. அவ்வாறு வர இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே ஓணப் பண்டிகையை கொண்டாட ஓணப்பட்டும், ஜரிகை வேட்டியும் எடுத்து நாளை மறுநாள் விடியலுக்காக காத்திருக்கிறார்கள். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

யானைகளை மட்டும் ஏன் அரிதாக புற்றுநோய் தாக்குகிறது: காரணத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

மனிதர்களை விட பல மடங்கு பெரிதான யானைகள் மிக அரிதாகவே புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகிறது. மனிதர்களை ....»

VanniarMatrimony_300x100px_2.gif