பினாமி நிறுவனங்களை பார்க்க சந்திரபாபுநாயுடு ரகசிய வெளிநாடு பயணம்: என்.டி.ராமராவ் மனைவி புகார் || chandrababu naidu secret abroad journey for visit proxe asset
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
பினாமி நிறுவனங்களை பார்க்க சந்திரபாபுநாயுடு ரகசிய வெளிநாடு பயணம்: என்.டி.ராமராவ் மனைவி புகார்
பினாமி நிறுவனங்களை பார்க்க சந்திரபாபுநாயுடு ரகசிய வெளிநாடு பயணம்: என்.டி.ராமராவ் மனைவி புகார்
நகரி, ஆக. 27-
 
என்.டி.ஆர். தெலுங்குதேச கட்சியின் தலைவியும், என்.டி.ராமராவ் மனைவி யுமான லட்சுமி பார்வதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
கடந்த 15 ஆண்டுகளாக சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவர் ரகசியமாக செல்ல வேண்டிய அவசியம் என்ன?.
 
ஏற்கனவே 'தெஹல்கா'' பத்திரிக்கை நாட்டிலேயே சந்திரபாபுநாயுடுதான் செல்வந்தரான அரசியல் தலைவர் என அறிவித்துள்ளது. அவருக்கு பினாமி பெயரில் சிங்கப்பூர், மலேசியாவில் ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் இருப்பதாக அப்பத்திரிகை வெளியிட்டது. 2009-ம் ஆண்டுக்கு பிறகு சி.எம்.ரமேஷ் மற்றும் சுஜனா சவுதரி ஆகியோரை சந்திரபாபுநாயுடு ராஜ்யசபா உறுப்பினர்களாக்கினார்.
 
இவர்கள் இருவரும் அரசியலுக்கு புதியவர்கள். 2009-ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் இருவர் மூலம் தெலுங்குதேசம் கட்சி தேர்தலுக்கு முன் பணபரிமாற்றம் நடந்துள்ளது. எனவே சந்திரபாபுநாயுடுவின் ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
 
இவ்வாறு லட்சுமி பார்வதி கடிதத்தில் கூறியுள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை

உலகக்கோப்பை போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய ....»