ஈரானில் 2 நாள் மாநாடு: 30 ந்தேதி மன்மோகன்சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு || iran conference meeting rajapakse meet mamohansingh
Logo
சென்னை 05-10-2015 (திங்கட்கிழமை)
ஈரானில் 2 நாள் மாநாடு: 30-ந்தேதி மன்மோகன்சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு
ஈரானில் 2 நாள் மாநாடு: 30-ந்தேதி மன்மோகன்சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு
டெக்ரான், ஆக. 27-
 
ஈரான் தலைநகர் டெக்ரானில் அணி சேரா நாடுகளின் மாநாடு வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நாளை ஈரான் நாட்டுக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் 3 நாட்கள் தங்கி இருப்பார்.
 
அப்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மன்மேகான்சிங் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேயும் கலந்து கொள்கிறார். அவர் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
எனவே ஈரானில் பிரதமர் மன்மோகன்சிங்கும் ராஜபக்சேயும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. 30-ந்தேதி (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின் போது இந்தியா-இலங்கை உறவு தொடர்பாக இருவரும் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் வர உள்ளது. இதுபற்றி ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் விவாதிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவை மட்டம் தட் டும் வகையில் சமீபத்தில் கொழும்பு நகரின் மையப் பகுதியில் ஒரு இடத்தை ரூ. 100 கோடிக்கு சீனாவுக்கு இலங்கை கொடுத்தது.
 
இது பற்றியும் அவர்கள் பேசக் கூடும். தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது பற்றி இருவரும் பேசுவார் களாப என்று உறுதியாக தெரியவில்லை. தமிழக மீனவர்கள்தான் எல்லை தாண்டி போய் விடுவதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவதால் பிரதமர் மன்மோகன்சிங், ராஜபக்சே யிடம் அது பற்றி பேச வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஆந்திராவில் இஸ்கான் அமைப்பின் சார்பில் ரூ.200 கோடி செலவில் உருவாகும் கிருஷ்ணர் கோவில்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொண்ட வீடு கோட்டை என்ற இடத்தில் இஸ்கான் அமைப்பின் ....»

VanniarMatrimony_300x100px_2.gif