காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும்: ஜெயலலிதா கருத்துக்கு கருணாநிதி ஆதரவு || cauvery commissioner meeting jayalalitha 2nd letter
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும்: ஜெயலலிதா கருத்துக்கு கருணாநிதி ஆதரவு
காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும்: ஜெயலலிதா கருத்துக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை,ஆக.24-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்திற்குத் தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகின்ற காரணத்தால், காவிரி ஆணையத்தை உடனே கூட்டும்படி பிரதமருக்க தமிழக முதலமைச்சர் அவசரக் கடிதம் எழுதியிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தின்படி பிரதமர் உடனடியாக காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் கேட்டுக் கொள்கிறேன்.
 
2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு ஜெயலலிதா எழுதும் இரண்டாவது கடிதம் இது. தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்து; இவ்வாறு பிரதமருக்குக் கடிதம் எழுதினால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார்? “முதலமைச்சர்; பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டு, இங்கேயே உட்கார்ந் திருந்தால் என்ன செய்வது? நேரிலே சென்று கேட்டிருக்க வேண்டாமா? தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? நேரில் பிரதமரைப் பார்த்துக் கேட்டிருக்க வேண்டாமா? கபட நாடகம் போடும் கையாலாகாத சர்க்கார் இது” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வசை பாடி மகிழ்ந்திருப்பார்.
 
ஆனால் இப்போது இரண்டாவது கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் காவிரி ஆணையத்தை இதுவரை ஏன் கூட்டவில்லை என்றால், கடந்த காலத்தில் இதே ஜெயலலிதா காவிரி ஆணையத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் தான் என்று கூடச் சொல்லலாம். 21-8-1998-ல் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றம் ஏழாண்டுகளுக்கு முன்பு கொடுத்த இடைக் காலத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக, தகராறு செய்து கொண்டிருக்கிற நான்கு மாநில முதல்வர்கள், பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் உறுப்பினர்கள் என்றால் அந்த ஆணையம் நடைமுறைக்கு வராத ஒன்றுதானே? ஆணையம் என்றால் என்ன? விதிக்கப்பட்ட செயலை செய்யும் அதிகாரம் உடையது என்பதுதான் அதன் பொருள்.
 
ஆனால், பிரதமர் தலைமையிலான ஆணையத்திற்கு காவிரி நதி நீர் தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற வெறும் விவாத அமைப்பாகத்தான் இந்தப் புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் புதிய ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி ஒப்புக் கொண்டதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான குறுவை விவசாயம் முடிந்து விட்டது. அறுவடைக்குத் தயாராகி விட்ட நிலையில் கர்நாடகா இனிமேல் தண்ணீர் விட்டாலும் பலனில்லை. ஆக, பிரதமர் தலைமையிலான புதிய ஆணையம் என்பது தமிழ்நாட்டுக்கு எள்ளளவும் நன்மை பயக்காத ஏமாற்றுத் திட்டமே என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய ஜெயலலிதாதான் நேற்றைக்கு பிரதமருக்கு உடனடியாக அதே காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு கடிதம் எழுதியிருக்கிறார். 2-4-2002 அன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, “செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்”, “பல் இல்லாத ஆணையம்”; அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம், மத்திய அரசு சொன்னதை ஏற்றுக் கொண்டு காவேரி பிரச்சினையில் துரோகம் விளைவித்தது தி.மு.க. அரசுதான்” என்று தேவையில்லாமல் தி.மு.க. மீது வசை பாடினார்.
 
இதையெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் உண்மை நிலை மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை; சம்பாவாவது பயிரிடப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது என்பதுதான். அ.தி.மு.க. விற்கு வாக்களித்தால் தமிழ்நாட்டில் பாலாறு பாயும், தேனாறு ஓடும், பிரச்சினைகள் எல்லாம் நொடியில் தீர்ந்து விடும், எந்த நேரத்திலும் மின்பற்றாக் குறையே இருக்காது, கொலை, கொள்ளை என்பதே என்னவென்று தெரியாமல் மாயமாய் மறைந்து விடும் என்றெல்லாம் நம்பி வாக்களித்து எதுவும் நடக்காமல், ஏமாந்து நிற்கும் தமிழ் நாட்டு மக்களே, உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்ல நான் தயாராக இல்லை.
 
ஏன் என்றால் உங்களில் நானும் ஒருவன் அல்லவா?.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

இயற்கையை நாம் அழித்தால் நம்மை இயற்கை அழிக்கும்: ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து

சென்னையில் நேற்று முன்தினம் பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ....»