செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தில் காற்று மானி கருவி சேதம் || Sent to Mars quriacity shuttle air gauge instrument damage
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
  • ஆதார் எண் கட்டாயமா?: இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
  • வேலூர் அருகே இருசக்கர வண்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: 2 பேர் பலி
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தற்போது நீர்மட்டம் 69 அடி
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தில் காற்று மானி கருவி சேதம்
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தில் காற்று மானி கருவி சேதம்
நியூயார்க், ஆக. 22-

மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

இந்த ஆய்வுகூட விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் காலே கிரேடர் என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு பாறைகள் மலைகள் உள்ளிட்ட பகுதிகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிய பொருத்தப்பட்ட அந்த கருவி சேதம் அடைந்துவிட்டது. இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கலத்தை கண்காணித்து வரும் குழு தலைவர் ஜாவியர் கோமெஷ்-எல்விரா தெரிவித்துள்ளார்.

கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும்போது அங்கு ஏற்பட்ட நிலஅதிர்வினால் உடைந்து சிதறிய பாறைகள் மோதியதால் விண்கலத்தில் உள்ள வயர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்திருக்கலாம். அதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அதை சரி செய்து விடலாம். அதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

காற்று மானி தவிர தட்பவெப்ப நிலை அறியும் கருவி உள்பட மற்ற அனைத்து உபகரணங்களும் முழுமையாக செயல்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகள் 3 பேர் கைது

லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராய்விந்த் ....»

VanniarMatrimony_300x100px_2.gif