ஒடிசா: ரூ.40 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கூண்டோடு கைது || Dacoit gang held
Logo
சென்னை 31-03-2015 (செவ்வாய்க்கிழமை)
  • கெஜ்ரிவால் மீது ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • 2000-ம் ஆண்டில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது
  • வேளச்சேரி விஜயநகரம் பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
  • ஜம்மு- காஷ்மீரில் 15 உடல்கள் மீட்பு
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
  • மத்திய மந்திரி சபை இன்று மாலை கூடுகிறது: நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து ஆலோசனை
ஒடிசா: ரூ.40 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கூண்டோடு கைது
ஒடிசா: ரூ.40 லட்சம் கொள்ளையடித்த கும்பல் கூண்டோடு கைது
ராயகடா,ஆகஸ்ட்.20-
 
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் கடந்த வாரம் தனியார் நிறுவனம் ஒன்றின் அலுவலர்கள் சிலர், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு ஜீப்பில் திகிரி பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சென்ற ஜீப் கலியபடா பகுதிக்கு வந்தபோது, திடீரென அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் ஊழியர்களைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 40 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
 
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், அந்தக் கொள்ளைக்கும்பலை இன்று கூண்டோடு கைது செய்தனர். அதே நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதையும் கண்டுபிடித்துள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 5 செல்போன்கள், ஒரு கோடாரி, மற்றும் சில லத்திகளும் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இந்தக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கார்த்திகா நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளை நடைபெற்ற அன்று கார்த்திகா நாயக் பை நிறைய பணத்துடன் அலுவலகத்திற்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதாலேயே கொள்ளையர்களைப் பிடிக்க முடிந்ததாகவும் தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மீண்டும் கனமழை அபாயம்: காஷ்மீரில் 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஸ்ரீநகர், மார்ச் 31–கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, ஆறுகளில் திடீர் ....»