Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை: தேசிய மகளிர் ஆணைய அறிக்கை தாக்கல்
புதுடெல்லி, ஆக. 20-

அரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டாவின் விமான நிறுவனத்தில் வேலை செய்த பணிப்பெண் கீதிகா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான கோபால் கண்டா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கீதிகா தற்கொலை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனியாக விசாரணை நடத்தி வந்தது. மமதா ஷர்மா தலைமையிலான இக்குழு, கீதிகாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் தாக்கல் செய்தது. அதில் கோபால் கண்டா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

இதுபற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறுகையில், ‘ஏராளமான பக்கங்கள் கொண்ட மகளிர் ஆணைய அறிக்கை வந்துள்ளது. அதனை முழுமையாக படித்த பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்’ என்றார்.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

டி.வி., மொபைல் போன்: ஆந்திரா வாக்காளர்களுக்கு ஜாக்பட்

ஐதராபாத், ஏப். 24–ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.அங்கு தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், ....»