சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர் || Federer beats Djokovic to win Cincinnati Open
Logo
சென்னை 03-07-2015 (வெள்ளிக்கிழமை)
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்
சின்சினாட்டி,ஆகஸ்ட்.20-
 
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இரண்டாம்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை 6-0 என எளிதாகக் கைப்பற்றிய பெடரர், இரண்டாவது செட்டை கடுமையாகப் போராடி 7-6 (9/7) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 6-0, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
 
31 வயதான பெடரர் சின்சினாட்டி ஓபன் சாம்பியன் பட்டத்தை இத்துடன் 5 முறை வென்றுள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக அவர் வென்றுள்ள 76-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இந்த வெற்றியால் பெடரர் 292-வது வாரமாக தற்போது முதலிடத்தில் நீடிக்கிறார்.
 
மேலும், அடுத்து நடக்க இருக்கும் அமெரிக்க ஓபன் தொடரிலும் அவர் முதலிடத்தில் நீடிப்பார். இந்த வெற்றியால் கிடத்துள்ள உற்சாகத்தால் பெடரர் 6 -வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நைஜீரியாவில் மீண்டும் போகோ ஹராம் தீவிரவாதிகள் வெறித்தனம்: 97 பேர் துடிதுடித்து பலி

நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் நேற்று போகோ ஹராம் ....»