தனித்தனி விபத்து: 2 தொழிலாளர்கள் பலி || accident two workers dead
Logo
சென்னை 01-10-2014 (புதன்கிழமை)
  • ஜெயலலிதா ஜாமின் மனு இன்று கர்நாடக உயர்நீதி மன்றத்தில் விசாரணை
  • வேலூரில் கனமழை: இடி தாக்கி 2 பேர் பலி
தனித்தனி விபத்து: 2 தொழிலாளர்கள் பலி
தனித்தனி விபத்து: 2 தொழிலாளர்கள் பலி
வேளச்சேரி, ஆக. 20-

கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் குளக்கரையை சேர்ந்தவர் ராஜி. கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல சு. கொளத்தூர் அண்ணாநகர் மெட்ரோ வாட்டர் கிணறு அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் வேளச்சேரியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

வேளச்சேரி பஸ்நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது எதிரே வேகமாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்து போனார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கார் டிரைவர் சேக் மொய்தீன் (28) என்பவரை கைது செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

பெங்களூரில் இருந்து சென்னை திரும்பி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி புதிய ....»

160x600.gif
160x600.gif