சூடான் விமான விபத்து: மந்திரி உட்பட 32 பேர் சாவு || sudan plane crash minister include 32 people dead
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
சூடான் விமான விபத்து: மந்திரி உட்பட 32 பேர் சாவு
சூடான் விமான விபத்து: மந்திரி உட்பட 32 பேர் சாவு
கார்டோம், ஆக. 20 -
 
சூடானில் ஈத் பெருவிழா கொண்டாட சென்றவர்களை ஏற்றிசென்ற விமானம் விபத்துக்குள்ளானது. போரால் நிலைகுலைந்த தெற்கு கார்டோபான் பகுதிக்கு ஈத் பெருவிழா கொண்டாடத்தில் கலந்துகொள்ள அந்நாட்டின் அறநிலைய அமைச்சர் காசி அல் சாதிக் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவரும் விமானம் மூலம் அங்கு பயணமானார்கள்.
 
வானம் கடுமையான மேகமூட்டத்துடன் இருந்ததால், வழி தெரியாமல் அந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்நாட்டு காபினெட் மந்திரி உட்பட அதில் பயணம் செய்த 32 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
 
விமான தரை இறங்குவதற்கு முன்பு விமானியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசிகொண்டிருக்கும்போது, அந்த விமானம் விபத்துக்குள்ளான சத்தம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதியில் இயக்கி வரும் தீவிரவாத இயக்கம் இந்த விபத்து மழையின் காரணமாக நடந்திருக்கிறது இதற்கு நாங்கள் பொறுப்பல்ல கூறியுள்ளது.
 
விமான விபத்து என்பது சூடானில் ஒரு சாதாரண விசயமாகும். ஏனெனின்ல் அங்கு விமானங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை இதனால் அந்நாட்டு விமானங்கள் ஐரோப்பா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு கார்டோமன் விமான தளத்தில் இறங்கிய விமானம் வெடித்து சிதறி அதிலிருந்த 30 பேர் இறந்தது குறிப்பிடதக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காவிரியின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினையில் பா.ஜனதா கபட நாடகம்: வைகோ பேட்டி

மயிலாடுதுறை, டிச. 20–காவிரியின் கூறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ....»