விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்ச் || Julian Assange asks US to renounce hunt against WikiLeaks
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
  • மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
  • தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் விடுவிக்க பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
  • உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா தோல்வி
விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்ச்
விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்ச்
லண்டன்,ஆகஸ்ட்.19-
 
உலக நாடுகள் பற்றிய திடுக்கிடும் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவுக்கு, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டனிலுள்ள ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அசாஞ்ச், இன்று முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றினார்.
 
பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அசாஞ்ச், ‘விக்கிலீக்சுக்கு எதிரான சதி வேலைகளை அமெரிக்கா நிறுத்தவேண்டும். இவ்விவகாரத்தில் அதிபர் ஒபாமா சரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி’ என்றார். மேலும், ரகசிய ஆவணங்களை விக்கிலீக்சுக்கு அளித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங்கை விடுவிக்க வேண்டுமெனவும் அமெரிக்காவை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
பாலியல் புகார்கள் தொடர்பான விசாரணைக்காக ஸ்வீடன் அவர் அரசிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, 41 வயது ஆஸ்திரேலியரான அசாஞ்சுக்கு கடந்த ஜூன் மாதம் லண்டனிலுள்ள ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை ஈக்குவடார் அரசு அசாஞ்சுக்கு தஞ்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது

இமாச்சல பிரதேசத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு ஆபரேசன் செய்த 10 பேருக்கு ....»