நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை || Development welfare schemes activities minister MSM Anandan consultation with officers
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • புதுச்சேரி சுற்றுப்பகுதியில் கனமழை
  • குஜராத்தில் இன்று 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்
  • மத்திய குழு இன்று புதுச்சேரியில் ஆய்வு
  • நெடுந்தீவு கடற்பகுதியில் ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
  • சீர்காழி அருகே காவலாளியை கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளை முயற்சி
  • கூடங்குளம் அருகே கூத்தங்குழியில் 110 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்
நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை
நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை
திருப்பூர், ஆக.19-

தமிழக முதல்-அமைச்சரின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத் துறை விதைச்சான்று மற்றும் விதை ஆய்வுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால் நடை பராமரிப்புத்துறை, பால் வளத்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு ஒவ்வொரு துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு துறையிலும் தற்போது நடந்து வரும் அரசின் திட்டங்கள், தாமதமாக நடக்கும் பணிகள், அதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் விளக்கம் கேட்டார்.

ஒவ்வொரு துறைகளிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் நடப்பு ஆண்டில் தமிழக முதல்-அமைச்சர் 1320 கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை புதிதாக நியமனம் செய்ய உத்தரவிட்டு உள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 51 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளவர்களுக்கான பணி நியமன உத்தரவை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் எம்.மதிவாணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சம்பத், மாநகர கமிஷனர் செல்வராஜ், நகராட்சி மண்டல இயக்குனர் பாலசந்தர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கலைவாணன், செயற்பொறியாளர்கள் தியாகராஜன் (அமராவதி அணை), சுப்பிரமணியன் (திருமூர்த்தி அணை), செல்வராஜ் (பரம்பிக்குளம் ஆழியாறு), குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தங்கராஜ், வேளாண்மை இணை இயக்குனர் தங்கராஜ், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் செரீப், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சென்னியப்பன், மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) பிரேமலதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சிவப்பிரகாசம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருப்பூர்

MudaliyarMatrimony_300x100px.gif