கலவர பீதி எஸ்.எம்.எஸ்.அனுப்பிய கோவை என்ஜினீயர் கைது || riot fear sms sending coimbatore engineer arrest
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
கலவர பீதி எஸ்.எம்.எஸ்.அனுப்பிய கோவை என்ஜினீயர் கைது
கலவர பீதி எஸ்.எம்.எஸ்.அனுப்பிய கோவை என்ஜினீயர் கைது
கோவை, ஆக. 19

அசாமில் ஏற்பட்ட வன்முறையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகாவில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தினர் பீதி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிச் செல்கிறார்கள்.

அசாம் செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநில மக்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று சென்னை, கோவை, ஐதராபாத், புனே, விசாகப்பட்டினம் நகரங்களில் எஸ்.எம்.எஸ். தகவல் அசுர வேகத்தில் பரவியது.

இது வடகிழக்கு மாநில மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அசாமுக்கு திரும்புவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. எஸ்.எம்.எஸ். தகவல்களை நம்பி சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் உறுதி அளித்தன.

இருப்பினும் வட மாநிலத்துக்கு திரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. கோவையில் எஸ்.எம்.எஸ். தகவல்களை பரப்புபவர்களை உடனே கைது செய்யுங்கள் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் கமிஷனர் ஹேமா கருணாகரன் தலைமையிலான போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோவை உக்கடம் கோட்டைமேட்டில் இருந்து அசாம் கலவரம் பற்றி எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுவது தெரிய வந்தது.

உஷாரான போலீசார் அந்த எண் யாருக்கு உரியது? என்று விசாரித்த போது அது உக்கடம் அல்அமீன் காலனியை சேர்ந்த முகமது ஷேக் அசேன்(வயது20) என்பவருக்கு உரியது என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். 

விசாரணையில் முகமது ஷேக் அசேன் என்ஜினீயர் என்பதும், தற்போது ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. பொதுமக்களிடையே குறிப்பாக வடகிழக்கு மாநிலத்தவரிடம் அச்சம் ஏற்படும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பியது ஏன்? என்று கேட்டபோது எனக்கு எஸ்.எம்.எஸ். பற்றி ஒன்றும் தெரியாது. அந்த எஸ்.எம்.எஸ். எனக்கு வந்தது. அதை நான் மற்றவர்களுக்கு பார்வர்டு செய்தேன் என்றார்.

வில்லங்கமான குறுஞ்செய்தியை ஏன் பலருக்கு அனுப்பினீர்கள்? என்று கேட்டபோது சரியான பதில் இல்லை. 100-க்கும் மேற்பட்டோருக்கு முகமது ஷேக் அசேன் எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பியதாக தெரிகிறது. அவர் மீது கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ். விவகாரம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் குறுஞ்செய்தியை அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.     
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கோவை

section1

கோவை மாநகரில் ரூ.1.98 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

கோவை, நவ. 27–கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணசாமி சாலை பாதாளசாக்கடைக்கு குழாய்கள் அமைக்கும் ....»