Logo
சென்னை 25-05-2013 (சனிக்கிழமை)
  • கூடங்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உதயகுமார்
  • வேலூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
  • துபாயில் இருந்து தங்கம் தயாரிக்க அமிலம் கடத்தி வந்தவர் கைது
  • காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்துகள் மோதல்: நடத்துனர் பலி - 15 பேர் காயம்
  • நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்: ஆந்திராவில் 2 நாளில் 71 பேர் பலி
  • காஞ்சிபுரம்: புழுதிவாக்கம் ஏரியில் மூழ்கி 3 பேர் பலி
51 சீர்வரிசை பொருட்களுடன் 11 ஜோடிக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
வேலூர், ஆக.19-

வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடிகர் விஜய் இன்று நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்கு தியாகராஜன் அப்சரா பாலாஜி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்கினார். இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் ஆனந்த் செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமான அளவில் திரண்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். விஜய் வருகையையொட்டி திருமணம் நடைபெறும் ரங்காபுரம் பகுதியில் மக்கள் இயக்க கொடி தோரணங்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் வேலூர் விழாக் கோலம் பூண்டிருந்தது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாகிஸ்தான்: பஸ்சில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 17 குழந்தைகள் கருகி சாவு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத் நகரில் நேற்று காலை குழந்தைகளை ....»

Recommendations
Recent Activity