தமிழக ராணுவ வீரர் 200 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல் || tamilnadu soldier 200 feet high tower threat
Logo
சென்னை 14-10-2015 (புதன்கிழமை)
தமிழக ராணுவ வீரர் 200 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல்
தமிழக ராணுவ வீரர் 200 அடி உயர கோபுரத்தில் ஏறி மிரட்டல்
புதுடெல்லி, ஆக. 19 -
 
ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கே.முத்து என்பவர் வேலை பார்த்து இருக்கிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் டெல்லியில் உள்ள 200 அடி உயர அலைப்பேசி கோபுரத்தில் ஏறினார். பிறகு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விசாரிக்க வலியுறுத்தி கீழே இறங்க அவர் மறுத்துவிட்டார். 
 
35 வயது முன்னாள் சிப்பாயான கே.முத்து நான்,  ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியுடன் பேச வேண்டும். அவருடன் பேச அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே நான் கீழே இறங்குவேன் என்று செய்தியாளரிடம் அலைபேசியில் பேசியிருக்கிறார். கீழே இறங்க மறுத்து கடந்த இரண்டு நாட்களாக மேலேயே இருக்கும் அவரின் உடல் நலன்குறித்து அவருக்கு வழங்கப்படும் திட உணவை ஏற்க மறுத்து விட்டார்.  திரவ உணவை மட்டுமே எடுத்துக்கொள்வதாக சொல்லப்படுகிறது.
 
அவருடன் பணியாற்றிய அவரது சகாக்கள் வேண்டுகோள் விடுத்தும் அவர் மசியவில்லை. தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த ஐந்து வருடங்களில் ஐந்து முறை பணிமாற்றம் செய்யப்பட்டு தனது மூத்த அதிகாரிகளால் தொந்தரவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
 
ராணுவத்தில் எனது ஒரு பிரச்னைக்காக மட்டுமில்லாமல் என்னை போன்று மற்ற வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளிக்கொணரவே நான் இந்த கோபுரத்தில் ஏறியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அவருக்கு ஒதுக்கப்பட்ட விடுமுறையை காட்டிலும், அதிகமாகவே அவர் விடுமுறை எடுத்துள்ளார். ஒரு முறை அவர் கீழே இறங்கி வருவாரேயானால், அவரது முறையீட்டை இங்கு வைப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

VanniarMatrimony_300x100px_2.gif