ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு || onam festival bangalore ernakulam thirunelveli special train southern railway announced
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக.19-
 
கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த மாதம் 29-ந் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
 
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
பெங்களூர், யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு, யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06543) ஆகஸ்ட் 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 9.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. இதே போன்று எர்ணாகுளத்தில் இருந்து யஷ்வந்த்பூருக்கு சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06544) மேற்குறிப்பிட்டுள்ள அதே தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.
 
மேலும் யஷ்வந்த்பூர் ஏழைகள் ரதம், குளு குளு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06549) ஆகஸ்ட் 27, 29-ந் தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது. இதே போன்று யஷ்வந்த்பூர் ஏழைகள் ரதம், குளு குளு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06550) ஆகஸ்ட் 28, 30-ந் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடைகிறது.
 
இதே போன்று யஷ்வந்த்பூர் ஏழைகள் ரதம், குளு குளு சிறப்பு ரெயில் (06515) ஆகஸ்ட் 20, 22-ந் தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடைகிறது. அதே போன்று யஷ்வந்த்பூர் ஏழைகள் ரதம், குளு குளு சிறப்பு ரெயில் (06516) ஆகஸ்ட் 21, 23-ந் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காங். மேலிடம், ப.சிதம்பரம் மீது ஞானதேசிகன் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, அக். 31–தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் இன்று சத்தியமூர்த்தி பவனில் ....»