அசாம் கலவரத்துக்கு காரணம் யார்? துப்பு தருபவருக்கு பரிசு ரூ.1 லட்சம்: சி.பி.ஐ. அறிவிப்பு || assam violence who is responsible clue lender 1 lakh reward cbi announced
Logo
சென்னை 30-08-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அசாம் கலவரத்துக்கு காரணம் யார்? துப்பு தருபவருக்கு பரிசு ரூ.1 லட்சம்: சி.பி.ஐ. அறிவிப்பு
அசாம் கலவரத்துக்கு காரணம் யார்? துப்பு தருபவருக்கு பரிசு ரூ.1 லட்சம்: சி.பி.ஐ. அறிவிப்பு
புதுடெல்லி, ஆக.19-
 
அசாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங்க், துப்ரி மாவட்டங்களில் வசித்துவருகிற போடோ பழங்குடி இன மக்களுக்கும், வங்காளதேசத்தில் இருந்துவந்து குடியேறிய சிறுபான்மை இன மக்களுக்கும் இடையே மூண்ட கலவரங்கள் நாடுமுழுவதும் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த கலவரங்களில் 77 பேர் உயிரிழந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்தக் கலவரங்கள் தொடர்பாக சி.பி.ஐ. ஏழு வழக்குகளை பதிவுசெய்துள்ளது. விசாரணை நடத்துவதற்காக 2 டி.ஐ.ஜி.க்கள் தலைமையில் சிறப்பு குற்றப்புலனாய்வுப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் தற்போது அசாமில் முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் தரினி மிஷ்ரா, டெல்லியில் நேற்று கூறியதாவது:-
 
அசாமில் நடந்துள்ள கலவரங்களில் தொடர்புடைய விஷமிகளை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை, புகைப்படங்களை, ஆடியோ-வீடியோ தொகுப்புக்களை தர முன்வருபவருக்கு ரூ.1 லட்சம் வரையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
 
இதற்கான சிறப்பு ஹெல்ப்லைன் எண்கள். 08811099997, 08811099996 ஆகும். இந்த எண்களில் தொடர்புகொண்டு தகவல்கள் தரலாம். தகவல் தருபவர்களை பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதற்கிடையே கோக்ரஜார் மாவட்டத்தில் கோஸ்சைக்கான் என்ற இடத்தில் உள்ள விடுதியில் நடந்த இன மோதல்கள் குறித்த சில வீடியோ தொகுப்புக்களை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், கலவரங்கள் நடந்த இடங்களில் மத்திய தடய அறிவியல் ஆய்வுக்கூட குழுவினர் முகாமிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சுவாசிலாந்தில் அழகிகள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் 38 பெண்கள் பலி

சுவாசிலாந்தில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் 38 பெண்கள் இறந்ததுடன்,  20 பேர் காயமடைந்ததாக செய்திகள் ....»

amarprash.gif