சீனா மாணவி உலக அழகியாக தேர்வு || china girl student miss world selected
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • இலங்கை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பார்வையிட்டார்
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்ரமணியசாமி
  • போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார்
சீனா மாணவி உலக அழகியாக தேர்வு
சீனா மாணவி உலக அழகியாக தேர்வு
பெய்ஜிங், ஆக. 19 -
 
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் நேற்று உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார்.
 
பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தேர்வு பெற்றார். பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ் தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா யுவுக்கு சூட்டி மகிழ்ந்தாள். 
 
இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகி வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர  விரும்புவதாக அப்போது கூறினார். வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், ஆஸ்திரேலியா நாட்டின் அழகி ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் சூட்டப்பட்டனர். ஏழாவதாக வந்த இந்திய அழகி வண்ய மிஸ்ரா சமூக ஊடக அழகியாகவும், நோக்க அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன.
 
இறுதி சுற்று போட்டியில் கலந்து கொண்ட அழகிகளிடம், அடுத்த  உலக அழகியாக  தேர்வாவதற்கு என்ன தகுதி வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இந்திய அழகியான வண்ய மிஸ்ரா ஒரு பெண் தான் செல்லுமிடங்களில் அவளுக்கே உரித்தான அன்பான இதயத்துடனும் அடக்கத்துடனும் இருக்கிறாள் என்ற உணர்வை வெளிப்படுத்தும் படியாக அடுத்த மிஸ் வேர்ல்ட் இருக்கணும் என்று பதிலளித்து இருந்தார்.
 
கடந்த 2000 ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் இந்தியாவின் ப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்

சென்னை, அக். 31–சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர ....»