Logo
சென்னை 18-05-2013 (சனிக்கிழமை)
இன்று பிறை தெரியவில்லை: டெல்லியில் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
புதுடெல்லி, ஆக. 18-
 
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் நோன்பு இருந்து வருகின்றனர். ஒரு மாத காலம் வரை நீடிக்கும் இந்த நோன்புக் காலத்தின் கடைசி நாளில் பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
 
இந்த ஆண்டுக்கான நோன்பு கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் டெல்லியில் இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தெரியாததால் திங்கட்கிழமை ஈத்-உல்-பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும், நாளையும் நோன்பை தொடரவேண்டும் என்றும் பதேபூர் மசூதியின் ஷாகி இமாம் மவுலானா முப்தி முகமது முக்காராம் தெரிவித்தார். காதீம் ராயத் ஹிலால் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றமதி செய்ய அந்நாட்டு அரசு விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ....»

Recommendations
Recent Activity