வியட்நாமில் சூறாவளிக் காற்றுடன் கன மழை: 4 பேர் பலி || Typhoon kills four causes flooding in Vietnam
Logo
சென்னை 31-07-2015 (வெள்ளிக்கிழமை)
  • இந்தியா - வங்கதேசம் எல்லை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது
  • பவானி சாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
  • வடசென்னை அனல்மின் நிலைய முதல் நிலையின் 3-வது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு
வியட்நாமில் சூறாவளிக் காற்றுடன் கன மழை: 4 பேர் பலி
வியட்நாமில் சூறாவளிக் காற்றுடன் கன மழை: 4 பேர் பலி
ஹனோய், ஆக. 18-
 
வியட்நாமின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளிக் காற்று நேற்று கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் தலைநகர் ஹனோய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
 
இந்த சூறாவளிக் காற்றின்போது, ஹனோய் நகரில் சாலையில் சென்ற கார் மரத்தின்மீது தூக்கி வீசப்பட்டது. இதில் டிரைவர் பலியானார். வடக்கு சான் லா நகரில் மின்வயர் அறுந்து விழுந்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர். பாக் ஜியாங் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் வீட்டுக்குள் சிக்கி 46 வயது பெண் ஒருவர் இறந்தார்.
 
தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சுற்றுலா தலமான ஹா லாங் பே ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதுதவிர மற்ற இடங்களிலும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சுமார் 11 ஆயிரம் படகுகள் கரைகளில் முடங்கி கிடந்தன.
 
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளில் சென்று பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

இந்தியா-வங்கதேசம் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க எல்லை ஒப்பந்தம்: இன்று கையெழுத்தாகிறது

இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. ....»

MM-TRC-B.gif